கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். தொழில் சம்மந்தமாக தொலை தூரப்பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டு. உறவினர்கள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படலாம்.
சகோதர வகையில் சகாயம் கிடைக்கும் நாள். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நீங்கள் செய்த உதவிக்கு உறவினர்கள் நன்றி செலுத்துவர்.
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பிரியமான சிலரின் சந்திப்பு கிடைக்கும். குடும்ப நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
செல்போன் வழிச் செய்தி சிந்திக்க வைக்கும் நாள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முட்டுக்கட்டைகள் அகலும். அமைதி கூட ஆறுமுகன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வீடு வாங்கும் யோகமுண்டு.
புதிய நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பாராட்டும், புகழும் கூடும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சியில்வெற்றி காண்பீர்கள்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். சமுகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
காரிய வெற்றிக்கு கந்தப்பெருமானை வழிபட வேண்டிய நாள். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்று வந்து சேரும். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். விரயங்கள் கூடும். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தலைதூக்கலாம்.
கல்யாணக் கனவுகள் கைகூடும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். அக்கம்– பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைத்து மகிழ்வீர்கள். வீட்டைச் சீரமைக்கும் எண்ணம் நிறைவேறும்.
மனக்குழப்பங்கள் அகலும் நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். அதிரடியான முடிவுகளால் சில ஆச்சர்யங்கள் நிகழலாம். வீடு, மனை வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.