யாழ்.அரியாலை- நெடுங்குளம் பகுதியில் இராணுவ வாகனமொன்றுடன் புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நெடுங்குளம் பகுதியில் வாகனம் புகைகையிரதக் கடவையை கடக்க முயன்ற நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில் மற்றும் ஒரு இராணுவ வீரர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் மற்றும் படுகாயமடைந்த இராணுவ சிப்பாயையும் எடுத்துக் கொண்டு புகையிரதம் மீண்டும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினைக் நோக்கி சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விபத்து தொடரப்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.