Loading...
இலங்கை அணியின் நட்சத்திர வீரரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்க அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியில் பங்குபற்றுவார் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடுத்த T – 20 போட்டிகளில் பங்குபற்றுவார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
Loading...
இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவராக லசித் மலிங்க செயற்படுவதற்கு அவருக்கு தகுதி உள்ளதாகவும் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.
Loading...