சுவசக்தி கடன் யோசனை திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்றுஅலரிமாளிகையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
விவசாயம், கால்நடை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபார முயற்சிகள் ஆகியவற்றுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடனை மீள செலுத்துவதற்கு பல சலுகைகளும் குறைந்த வட்டி வீதங்களும் இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கால்நடை வளர்ப்பு, நுண் சிறிய மற்றும் மத்திய அளவிலான வியாபார முயற்சிகளை இலகுவாக ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதும் இந்தத் திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.
இன்று ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் செயல்முறை ரீதியாக மிகவும் சிறந்த யோசனைத்திட்டமாக அமையுமென்று கலாநிதி குமாரசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.