பிலிப்பைன்சில் ஒரே இடத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவை போல் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அதிக அளவில் குடிசை வீடுகள் உள்ளன. தலைநகரம் மணிலாவில் துறைமுகத்தையொட்டி ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மற்ற வீடுகளுக்கும் பரவியது. அதை கட்டுப்படுத்த முடிய வில்லை. ஒட்டு மொத்த குடிசை பகுதியையும் தீ ஆக்கிரமித்து கொண்டது.
நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தன. ஆனாலும் முடியவில்லை. இதில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமானது. தீக்குள் சிக்கி 7 பேர் காயம் அடைந்தனர். பல கோடி ரூபாய் பொருட்கள் நாசமானது.
ஒரே இடத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீ விபத்துக்கு என்ன காரணம் என்ன என்பது தெரியவில்லை. நாச வேலையால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.