சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள பிரபல நகரான Bernல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டின் Bernல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அந்நாட்டு ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைபேசி வந்தது.
தொலைபேசியில் பேசியவர்கள் தங்கள் குடியிருப்பில் உள்ள ஒரு பிளாக்கில் வெடிகுண்டு இருப்பதாக பதட்டத்துடன் தெரிவித்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் ராணுவத்தினரும் அங்கு சென்றனர்.
அப்போது உலக போரில் பயன்ப்படுத்தப்படும் இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் அங்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வெடிகுண்டுகள் 1938ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. ஒரு குண்டு வெடிக்கும் நிலையில் இருந்ததால் அதை உடனே வெடிகுண்டு நிபுணர்கள்செயலிழக்க செய்தனர்.
இந்த வெடிகுண்டுகளை அங்கு வைத்தவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட விடயம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.