பாலக்கீரையை தினமும் சாப்பிட்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க பாலக்கீரை உதவுகிறது.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
பாலக் கீரை – ஒரு கப்
பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) – 3
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இரண்டு வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சூப்பரான சத்தான பாலக்கீரை தோசை தயார்.
ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்!