இந்த ஸ்மார்ட்வாட்ச், வருகிற ஜூன் 28-ந் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
டிஸ்ப்ளேவை பொருத்தவரை 360 x 360 பிக்சல்களுடன் கூடிய 1.32 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்வாட்ச்சுக்கு ரியல்மி டெக்லைஃப் வாட்ச் R100 என பெயரிடப்பட்டு உள்ளது. இது புளூடூத் காலிங் வசதியுடன் வருகிறது. மேலும் இதில் மிகப்பெரிய பேட்டரி பேக் அப் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் அறிமுகமாகி உள்ளது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை 360 x 360 பிக்சல்களுடன் கூடிய 1.32 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது. இதில் இரண்டு ஹார்டுவேர் பட்டனும் இடம்பெற்றுள்ளது. ஒன்று UI நேவிகேஷன் மற்றொன்றும் வேகமாக ஸ்போர்ட்ஸ் மோடுக்கு மாற்றவும் உதவும்.
இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்சில் இதய துடிப்பை கண்காணிக்கும் சென்சார், ஸ்லீப் டிராக்கர் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இது iOS மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் இரண்டிற்கும் இணக்கமானது. மேலும் புளூடூத் 5.2 இணைப்பு வழியாக ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்படும் வசதியும் இதில் உள்ளது.
இது வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் அலெக்ஸா சபோர்ட் உடன் வந்துள்ளது. மேலும் இதில் திசைகாட்டி, காலண்டர், அலாரம், கடிகாரம் மற்றும் ஸ்பீக்கர் & மைக்ரோஃபோன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இது ஒரு வருட வாரண்டி உடன் அறிமுகமாகி உள்ளது. நேற்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்வாட்ச், வருகிற ஜூன் 28-ந் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ.3,999 ஆகும், தற்போது அறிமுக ஆஃபராக ரூ.3,699க்கு விற்பனைக்கு வர உள்ளது.