ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானபோதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டது.
நத்திங் போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.
நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் 2 வாரங்களுக்கு மேல் இருந்தாலும், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.
அதில் ஒன்றைப் பற்றி தான் தற்போது பார்க்கப்போகிறோம். நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை எப்படி இருக்கும் என்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அழைப்பிதழ் முறையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
புது நிறுவனம் என்பதனால் உடனடியாக லட்சக்கணக்கிலான போன்களை தயாரிக்க முடியாது. அதனை கருத்தில் கொண்டு முதலில் அழைப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக உற்பத்தி கூடியதும். அழைப்பிதழையும் அதிக அளவில் கொடுத்து விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானபோதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.