Loading...
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சர், அவுஸ்ரேலியாவில் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்ட போதிலும் சட்டவிரோத குடியேற்றங்களை கையாளும் பழைய கொள்கையே தற்போதும் இருப்பதாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...