ஆரம்பத்தில் பல சர்ச்சைகளை சந்தித்து வந்த நயன்தாரா அவற்றில் இருந்த பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த விஷயங்களை செய்யக்கூடாது என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மேலும் நயன்தாராவுக்கு எப்போது திருமணம் நடக்கும் என கோடம்பாக்கமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
அதுபடிதான் நயன்தாராவும் தற்போது நடந்து வருகிறார். மேலும் நயன்தாரா நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தில் நடிப்பதற்கும் விக்னேஷ் சிவன் தான் காரணம். மேலும் நயன்தாரா நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் விக்னேஷ் சிவனும் கேட்டுக்கொள்வார்.
நயன்தாரா விக்னேஷ்
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மறுநாள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்கள்.
அதன் பிறகு நயன்தாராவின் சொந்த ஊரான கொச்சிக்கு சென்று அவரின் உறவினர்களுடன் நேரம் செலவிட்டனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவரவர் வேலையில் பிசியாக இருப்பதால் தேனிலவுக்கு செல்ல நேரமில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார்கள். முன்னதாக நயன்தாரா தேனிலவுக்கு செல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியானதும் ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.
நயன் போட்ட கண்டிஷன்
தற்போது நயன்தாரா படப்பிடிப்பில் அதிக கண்டிஷன் போட்டு வருகிறாராம். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் O2 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இப்படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு காட்சியில் பஸ் மண்ணில் புதைந்து விடும். அந்த காட்சி எடுக்கும்போது என் மீது மண் படக்கூடாது என நயன்தாரா ஏகப்பட்ட கண்டிஷன் போட்டாராம்.
திருமணத்திற்கு முன்பே நயன்தாரா இந்த கண்டிஷனை போட்ட நிலையில், திருமணம் முடிந்த பின்பு இன்னும் எவ்வளவு கண்டிஷன் போடுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹினீமூனிலிருந்து வெளியிட்ட புகைப்படம்
கணவர் விக்கியுடன் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ள நயன்தாரா அங்கிருந்து சில ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் நயன்தாரா கழுத்தில் தாலியுடன் முண்டா பனியன் ஒன்றை போட்டுக்கொண்டு சோகமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.