அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஆசியாவுக்கான பிரதி உதவித் திறைசேரிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலாளரான கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடினர்.
இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஜூலி சுங், ‘இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க இது ஒரு சவாலான நேரம், இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் நீண்ட கால பங்காளித்துவத்தை வழங்குகிறோம்’ என பதிவிட்டுள்ளார்.
மூன்று நாள் பயணமாக இக்குழுவினர் நேற்று காலை இலங்கையை வந்தடைந்தனர்.
அவர்கள் இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.