எரிபொருள் நெருக்கடி காரணமாக வெளியிடங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் காய்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கையிருப்பில் உள்ள காய்கறிகளை பொருளாதார மையங்களுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் இல்லாததால், சில சமயங்களில் விளைநிலங்களில் காய்கரிகள் அழிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 500 முதல் 600 ரூபாவாக இருந்த நிலையில், நேற்று (28) ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 280 முதல் 300 ரூபாய் வரை குறைந்துள்ளது.
சில்லரை விலை குறையவில்லை
பல காய்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளது. கரட் 130-150 ரூபா, பீட்ரூட் 200 ரூபா, முட்டைகோஸ் 150 ரூபா, வெண்டைக்காய் 140-160 ரூபா, தக்காளி 100-120 ரூபா, முள்ளங்கி 70-90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எனினும், காய்கறிகள் மொத்த விலையில் இருந்தும் சில்லரை விலை குறையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சில்லரையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 500 ரூபாவாகவும், போஞ்சி ஒரு கிலோ சில்லரை விலை 500 ரூபாவாகவும் இருந்தது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக செலவுகள் அதிகரித்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன், வியாபாரிகளின் வருகையும் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.