தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஆட்சியமைப்பதற்கான அனுமதியை அதிமுகவின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா கோரியிருக்கிறார் .
முன்னதாக, இன்று மாலை காபந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்தித்துப் பேசியிருந்தார்.
சந்திப்பின் முடிவில் தர்மம் வெல்லும் என்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சரின் நினைவிடத்திற்குச் சென்று மலர்மாலை வைத்து வணங்கிவிட்டு ஆளுநரைச் சந்திக்கச் சென்றார்.
ஆளுநரைச் சந்திக்கச் சென்ற சசகலா ஆட்சியமைப்பதற்கான உரிமையினைக் கோருவதற்கான சந்திப்பாக இது அமைந்திருந்தது.
இந்நிலையில், ஆட்சியமைப்பதற்காக தனக்கு ஆதரவாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதாக தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஆளுநரிடம் வழங்கி ஆட்சியமைப்பதற்கான உரிமையினை சசிகலாகோரியிருந்தார்.
இதேவேளை தமிழகம் முழுவதும் தமிழ் மக்கள் பெரும் பரபரப்போடு அரசியலை அவதானித்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தமக்கு ஆதரவாக இருப்பதாக சசிகலா தெரிவித்திருக்கிறார்.
அதற்காக அவர்களிடம் கையெழுத்து வாங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.
எனினும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வேறு இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதுவாயினும், சசிகலா- ஆளுநர் சந்திப்பின் பின்னர் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது தெரியவரும் என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.