நாட்டு மக்கள் வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்> தமது பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை எதிர்பார்க்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.
அதற்கு பதிலளித்து சபாநாயகரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் உரையாற்றிய அவர், இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “சபாநாயகரே மரபை உடைத்து அவரை பேச அனுமதித்தீர்கள். நியாயமாக இருங்கள். தயவுசெய்து எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எங்கள் வாயை அடைக்க நீங்கள் முயற்சிக்காதீர்கள். பிரதமரின் அறிக்கைக்கு நான் பதில் சொல்ல வேண்டும்.
சபாநாயகரே என்னை வாயடைக்க வராதீர்கள். நீங்கள் கத்துவதைக் கண்டு நான் பயப்படவில்லை. நன்றாக நினைவில் கொள்ளுங்கள். சத்தம் போட்டாலும் பேசும் தைரியம் எனக்கு இருக்கிறது.
பெட்ரோல்இ டீசல் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தீர்வு எங்கே? தோட்டத் தொழிலாளர்களுக்கு தீர்வு எங்கே? ஏற்றுமதி துறையின் வீழ்ச்சிக்கு என்ன தீர்வு?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.