மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சாம்சங் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது.
அதற்கு போட்டியாகத் தான் ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
ஒப்போ நிறுவனம் விரைவில் மடிக்கக்கூடிய போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நிறுவனம் தற்போது புதிதாக இரண்டு மடிக்கக்கூடிய மாடல் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கின் Z பிளிப் மாடல்களை போன்று இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இரண்டில் ஒன்று கிளாம்ஷெல் ஃபோல்டபிள் டிசைனையும், மற்றொன்று புத்தகத்தை போன்று மடிக்கக்கூடிய டிசைனையும் கொண்டுள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சாம்சங் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது. தற்போது அதற்கு போட்டியாகத் தான் ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
மற்றபடி விரைவில் ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை 18-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளன.