கொழும்பினை இன்று(புதன்கிழமை) வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட யூரியா உரக் கப்பல் வருகை மேலும் தாமதமாகும் என கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடற்காற்றின் தாக்கம் காரணமாக குறித்த கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஓமானில் உள்ள ‘சௌ ஓமன்’ என்ற துறைமுகத்தில் இருந்து கடந்த 03ஆம் திகதி குறித்த புறப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலவும் கடும் காற்றின் தாக்கம் காரணமாக யூரியா உரக் கப்பல் 9ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடையும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த கப்பலில் 40 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.