ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கவும், ஒட்டுமொத்த அமைப்பு மாற்றத்தைக் கொண்டு வரவும் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த சூழ்நிலைக்கான பொறுப்பை ஏற்றும் மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமலும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து ராஜபக்ஷ தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதே இந்த நாட்டின் விடுதலைக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
ஆகவே இராஜினாமா செய்துவிட்டு விரும்பிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை மக்களிடம் வழங்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.