Loading...
தனுஷ் எங்களுடைய மகன் என்று திருப்புவனம் தம்பதி மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் அவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனுஷ் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்த தம்பதி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, அவர் எங்களுடைய மகன் தான் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
Loading...
உறவினர்களும் வாக்குமூலம் கொடுக்க தயாராக உள்ளார்கள். அவருடைய சிறுவயது நண்பர்களும் சாட்சி சொல்வார்கள். எழும்பூர் ஆஸ்பத்திரியில் பிறந்ததாக அவர் தாக்கல் செய்துள்ள பிறப்புச் சான்றிதழ் பொய்யானது என கூறியுள்ளனர்.
அதோடு தனுஷ் தங்களின் மகன் என்பதை நிரூபிக்க மரபணு பரிசோதனைக்கும் தயார் என்றனர்.
Loading...