எரிபொருள் கோரி ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணப்பு போராட்டம் காரணமாக இன்று (புதன்கிழமை) ரயில் சேவையை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று பல அலுவலக ரயில்களை இரத்து செய்ய நேரிட்டதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
இன்று இயக்கப்படவிருந்த 48 அலுவலக ரயில்களில் 22 மட்டுமே இயக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்று ரயில் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ரயில் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் தமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள வேலைநிறுத்தம் செய்தனர். மேலும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் அதிக எரிபொருள் கேட்கின்றனர். இன்று ரயில் ஓட்டம் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நேற்று (05) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படாது என ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் மேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.