- முதலில் ஆடிய சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.
- கோவை அணியின் துவக்க வீரர் சுரேஷ் குமார் 64 ரன்கள் விளாசினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் -சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. அதிபட்சமாக கோபிநாத் 41 ரன்களும், பிரணவ் குமார் 32 ரன்களும், அஸ்வின் 31 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 21 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது. துவக்க வீரர் சுரேஷ் குமார் 64 ரன்கள் விளாசினார். கங்கா ஸ்ரீதர் ராஜு 13 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின்னர் சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஷாருக்கான் 5 ரன்களும் சேர்க்க, கோவை அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 149 ரன்கள் குவித்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சுரேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.