இருமனம் மட்டும் இணைந்த காதலை அனைத்து மனங்களும் ஏற்றுக் கொண்டால்தான் திருமண வாழ்வு இனிதாய் அமையும்.
பல காதல் பெற்றோரின் சம்மதம் கிடைக்காததாலேயே கருகிப் போய் விடுகிறது. அவர்களின் சம்மதம் பெற இதோ சில ஐடியாக்கள்.
—-1—-
உங்கள் காதலனையோ, காதலியையோ பெற்றோர் வெறுக்கும் காரணம் என்ன என்பதை கண்டுபிடியுங்கள்.
—-2—-
உங்களின் காதலின் தீவிரத்தையும், அன்பின் ஆழத்தையும் அவர்களும் புரிந்து கொள்ள சிறிது காலம் கொடுங்கள்.
—-3—-
ஆனால் இதைப்பற்றி உங்கள் காதல் இணையிடம் தகவல் தெரிவித்து விடாதீர்கள்.
—-4—–
உங்கள் காதலின் நிலை, எதிர்கால திட்டங்கள் குறித்து குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுங்கள்.
—–5—–
அவர்களின் இடத்திலிருந்து நீங்கள் யோசியுங்கள்.
—–6—–
உங்கள் விருப்பத்தையும், உணர்வுகளையும் பெற்றோருக்கு புரியவைக்க முயலுங்கள்.
சில நேரங்களில் இவை உபயோகப்படாமல் போகலாம். வறட்டு கவுரவம், அந்தஸ்து காரணங்களுக்காக உங்கள் காதலை எதிர்க்கும்போது, உங்கள் காதலின் மீது கலைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் நன்கு சிந்தித்து உங்களின் வாழ்வை தேர்ந்தெடுங்கள்.