முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளார்.
அங்கு கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா,
இலங்கை மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் இந்த போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் இளைஞர்கள், தமது காலத்தையும் நேரத்தையும் செலவழித்து, கோட்டா கோ கம, நோ டீல் கம, மைனா கோ கம ஆகிய இடங்களில் இளைஞர்கள் கூடி இருந்தனர்.
இளைஞர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். நாங்கள் அரசியல்வாதிகள் என்ற வகையில் அரசியலில் ஈடுபட்டாலும் எப்போதும் எனது ஆதரவு இந்த இளைஞர்களுக்கு இருந்தது.
அவர்களுடன் உள ரீதியாக இருக்கும் முழு நாட்டு மக்களையும் நாங்கள் ஆசிர்வதிக்கின்றோம். ஊழல் ஆட்சியாளர்கள், ராஜபக்ச ஆட்சியாளர்களை செல்லுமாறும் ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறும், மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு செல்லுமாறும், இவர்கள் கொள்ளையிட்ட பணத்தை அரசுடமையாக்குமாறும் இளைஞர்கள் கோருகின்றனர்.
இதற்காக சட்ட ரீதியான உதவிகளை வழங்க, தற்போதைய ஊழல் அரசாங்கம் முற்றாக பதவி விலகி, இளைஞர்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில், நாட்டை நேசிக்கும் தலைவரை தெரிவு செய்து, மக்களின் நாடி துடிப்பை அறிந்த தலைவர்களை தெரிவு செய்து, நாட்டை எதிர்கால சந்ததிக்காக கட்டியெழுப்ப வேண்டும்.
இளைஞர்களின் கோரிக்கை வெற்றி பெற வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவியை கைவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும்.இணைஞர்கள் தொடர்ந்தும் போராட வேண்டும் நாங்கள் தொடர்ந்தும் அவர்களுடன் இருப்போம். போராட்டத்தை கைவிடாது தொடருங்கள் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.