இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஐதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
விராட் கோலி, முரளி விஜய், புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாளில் 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. புஜாரா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடித்த முரளி விஜய் 108 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடித்த கேப்டன் கோலி 111 ரன்னுடன் களத்தில் இருந்தார். ரகானே 45 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்று 2-ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய விராட் கோலி, தனது சதத்தை இரட்டைச் சதமாக மாற்றினார். 239 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் இந்த இலக்கை எட்டினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 தொடர்களில் இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து விளையாடிய அவர், 204 ரன்களில் ஆட்டமிழந்தார்.