Loading...
நமது உடம்பில் இன்சுலின் ஹார்மோன் சரியாக சுரக்காமல் இருப்பதால், நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதற்கு அன்றாடம் நாம் உட்கொள்ளும் கொழுப்புகள் நிறைந்த உணவு பழக்கவழக்கங்களே காரணமாகும்.
எனவே நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டு பிரச்சனைகளையும் தடுப்பதற்கு, இயற்கையில் ஒரே மருந்து தீர்வாக உள்ளது.
Loading...
நீரிழிவு கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
- நாம் தினமும் 25 கிராம் அளவு வெந்தயத்தை ஒரு வேளைக்கு 12.5 கிராம் என்ற அளவில் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் காலை மற்றும் இரவு உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
- இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊரவைத்து அல்லது பொடியாக இடித்து தண்ணீர் மற்றும் மோரில் கலந்து, உணவு சாப்பிடுவதற்கும் 15 நிமிடங்களுக்கு முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வெந்தயத்தை அரைத்து பொடி செய்து, அதை தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், மற்றும் காய்கறி கூட்டுகள் இது போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு
அன்றாட உணவில் வெந்தயம் எடுத்துக் கொள்வதுடன், தினமும் நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம்.
வெந்தயத்தை உட்கொள்ளும் சில நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக இருக்கும்.
Loading...