முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை மீண்டும் நாடாளுமன்றம் வர வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக தேசியப்பட்டியல் எம்.பி. பதவியைத் துறப்பதற்கு மயந்த திஸாநாயக்க தயாராகவே இருக்கின்றார் என்று தெரியவருகின்றது.
மயந்த திஸாநாயக்க
நவீன் திஸாநாயக்க, கரு ஜயசூரியவின் மருமகன். அவரின் தம்பியே மயந்த திஸாநாயக்க. இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
இடைக்கால ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி துறந்தவுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இடைக்கால ஜனாதிபதியாக வேண்டும், 30 நாட்களுக்கு முன்பாகவே நாடாளுமன்றம் பதில் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று நேற்று மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.