Loading...
அலரிமாளிகை பகுதியில் கூரிய ஆயுதத்துடன் இராணுவ வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ வீரர் இன்று மாலை அலரிமாளிகை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பையில் கத்தியொன்றுடன் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்துள்ளார்.
Loading...
சந்தேகநபரிடம் மீட்கப்பட்டுள்ள பொருட்கள்
இதன்போது குறித்த நபரை அலரிமாளிகை பகுதியிலிருந்த ஆர்ப்பாட்டகாரர்கள் விசாரித்த வேளையில் அந்த நபர் கோபமடைந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் முரண்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவரிடமிருந்து வெளிநாடு செல்வதற்கான ஆவணங்கள் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
Loading...