தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்படம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். பின்னர், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார் என கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி அறிவித்தனர்.
ஆனால், ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் சந்தேகத்தை கிளப்பியது. மேலும் வெள்ளை அறிக்கை வெளியிடவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே இறந்த நிலையில்தான் வந்தார் என அப்போலோ மருத்துவமனை டாக்டரே தற்போது உண்மையை உடைத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும்
வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.