தமிழகத்தின் அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான கட்டத்தை அடைந்து வருகிறது. சசிகலாவிற்கும் பன்னீர் செல்வத்திற்கும் இடையே நீயா நானா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
சசியின் கூடாரத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளிவந்து பன்னீருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனை தடுக்க அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா மிரட்டி கடத்தி சென்று ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏக்கள் எங்களை யாரும் கடத்தவில்லை. நாங்களாக சுயமாக வந்துள்ளோம். சுதந்திரமாக உள்ளோம் என்று கூறுகின்றனர். காணவில்லை என வழக்கு தொடர்பவர்கள் வேறொருவரின் தூண்டுதலின் பேரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறுகின்றனர்.
மேலும் ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் 5 பேரை தவிர மற்றவர்கள் யாருக்கும் பேட்டி அளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.