Loading...
இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
இந்த சப்பாத்தி செய்வதும் எளிது, சுவையும் அலாதியானது.
தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் – 10,
மைதா மாவு – 100 கிராம்,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
பால் – 100 மில்லி,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
நெய் – 4 டீஸ்பூன்.
Loading...
செய்முறை:
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, 30 நிமிடம் மூடி வைக்கவும்.
இந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.
இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.
பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.
Loading...