ஆண்களுக்கு 13 உடல் எடை பிரிவிலும், பெண்களுக்கு 12 உடல் எடைப்பிரிவிலும் கடந்த 1 வாரமாக போட்டிகள் நடந்தது.
இதில் தமிழக அணி 2 வெண்கல பதக்கம் பெற்றது.
5-வது தேசிய இளை யோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.
ஆண்களுக்கு 13 உடல் எடை பிரிவிலும், பெண்களுக்கு 12 உடல் எடைப்பிரிவிலும் கடந்த 1 வாரமாக போட்டிகள் நடந்தது. இதில் தமிழக அணி 2 வெண்கல பதக்கம் பெற்றது.
ஆண்களுக்கான லைட் மிடில் வெயிட் (67-71 கிலோ) பிரிவில் ஜி.கபிலனும், பெண்களுக்கான லைட் வெயிட் பிரிவில் (57-60) ஆர்.மாலதியும் வெண்கலம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தனர்.
ஆண்கள் பிரிவில் சர்வீசஸ் அணி 9 தங்கம் உள்பட 11 பதக்கங்களும், மகளிர் பிரிவில் அரியானா 8 தங்கம் உள்பட 11 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தன.
அரியானா, மத்திய பிரதேசம் அணிகள் ஆண்கள் பிரிவிலும், மராட்டியம், டெல்லி அணிகள் பெண்கள் பிரிவிலும் முறையே 2-வது, 3-வது இடங்களை பிடித்தன.