இப்போது சசிகலா முதல்வராக அதிமுகவின் பல்வேறு மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் ஆதரவளித்துவருகின்றனர். ஆனால், முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
ஓபிஎஸ்ஸை திமுக பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று அதிமுக வட்டாரம் குற்றம்சாட்டுகிறது. சிலர் பிஜேபியின் கைவரிசை என்று சொல்லுகிறார்கள்.
நடிகர் கமல் தொடக்கத்திலிருந்தே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு நிலை எடுத்து இருந்தார். டிவிட்டரில் பதிவுகளும் அப்படியே போட்டார்.
ஒரு விவாதத்தில்,’ பன்னீர்செல்வ ம் எனக்கு நண்பரும் கிடையாது. எதிரியும் கிடையாது. அவர் திறமை இல்லாதவரும் அல்ல.. அவர் முதல்வராகவேண்டும் என்பதே விருப்பம்’என்று சொல்லிவிட்டார்.
சரி, எப்படி ஓபிஎஸ்ஸை கமல் பின்னால் இருந்து இயக்குகிறார்ன்னு கேட்கிறீங்க…
பாயிண்டுக்கு வருவோம்…
எந்த குற்றசாட்டுக்கும் பதில் சொல்லாம இருந்த ஓ.பி.எஸ்., ‘எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை பார்த்து சிரித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொன்னார்?
‘விலங்குகள் தான் சிரிக்காது. மனுசங்க சிரிப்பாங்க’ ன்னு உடனே பதில் சொன்னார்.
இந்த பதிலை எங்கேயோ முதல்ல கேட்டு இருக்கீங்க? ஞாபகத்துக்கு வந்துடுச்சா?
பாட்டை நல்லா கேட்டு பாருங்க…
அதே போல,விஸ்வரூபம் படத்தில, கமல் எப்படி அடிவாங்கிட்டு கடைசி நேரத்தில எந்திரிச்சி தாக்குறாரோ, அதுபோலவே இதுவும் நடக்குது இல்லையா?
அப்போ, யாரு ஓபிஎஸ் பின்னால் இருக்கா?
புரிஞ்சிச்சா?
திட்டாதீங்க மாண்புமிகு மக்களே! அவ்வ்வ்வ்!