கிரீன் டீ அதிகமாக பருகும்போது அதிலிருக்கும் காபின் அளவும் அதிகரித்து உடலுக்கு கேடு விளைவிக்கும்.
தூக்கமும் தடைபடும்.
தலைவலி பிரச்சினையும் உண்டாகும். ‘கிரீன் டீ’, பல்வேறு நன்மைகள் கொண்ட ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது.
உடல் எடையை குறைப்பதற்கு பெரும்பாலானோர் கிரீன் டீயைத்தான் நாடுகிறார்கள்.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கும், இதய நோயை கட்டுப்படுத்தும், வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தும், உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் என கிரீன் டீயின் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதேவேளையில் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதற்காக அதிகமாகவோ, அடிக்கடியோ கிரீன் டீ பருகுவது உடல் நிலையை பாதிக்கும்.
ஆனால் கிரீன் டீக்கு பதில் பட்டை டீ குடிப்பதால் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து, உடல் எடை குறையும். இதய நோய்கள் வராமல் காக்கும்.
இந்த டீயை தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கிரீன் டீ – 2 டீஸ்பூன்
பட்டைப்பொடி – கால் டீஸ்பூன்
தேன் – ஒரு டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கிரீன் டீ, பட்டைப் பொடி சேர்த்துக் 8 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.
நன்றாக கொதித்ததும் இறக்கி வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும்.
விருப்பப்பட்டால், பால் சேர்க்கலாம்.