தமிழக ஆளுநா் வித்யாசாகர் ராவ் காவல்துறை தலைவர் ராஜேந்திரன், தலைமை செயலாளா் கிரிஜா வைத்தியாநாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழத்தில் பதவி ஏற்பு விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு அனைத்தும் போலீசாரால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சசிகலா அனைவரையும் மிரட்டிதான் கையெழுத்து வாங்கி உள்ளார். அதன் காரணமாகத் தான் முதல்வர் உள்ளிட்ட பலா் அந்த ஆதரவு கடிதத்தில் கையெழுத்துட்டுள்ளனா் என்று ஆளுநா் நம்பி விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்த நிலையில் நீதி மன்றத்தில் எம்எல்ஏக்கள் காணவில்லை என்று தொடப்பட்ட வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனா், மற்றும் தமிழக அரசு, தமிழஅரசின் தலைமை செயலாளா் ஆகியோரை விளக்கம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் சசிகலா கொடுத்த கடிதத்திற்கு சாதகமான பதில் வராததால். சசியால் அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும். கூவத்தூர் சொகுசு ஓட்டலில் இருந்து இடம் மாற்றம் செய்துவிட்டனா்.
அவா்கள் எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்கும், ஏன் போலீசுக்கு கூட தெரியக்கூடாது என்பதற்காக இரவோடு இரவாக இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்க அரசு தனிப்படை அமைத்து பிடிக்கும் என தெரிகிறது.
இதனால் சசிகலா உச்ச கட்ட எரிச்சலில் உள்ளார். இது பன்னீரின் வெற்றியையே காட்டுகிறது.