நாட்டின் கூட்டணி அரசாங்கத்தில் மிகப்பெரிய கட்சியான ஃபைவ் ஸ்டார் இயக்கம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது ஆதரவை மீள பெற்றதை அடுத்து, இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி நேற்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஆனால், இத்தாலியின் ஜனாதிபதி, செர்ஜியோ மட்டரெல்லா, டிராகியின் இராஜினாமாவை நிராகரித்துள்ளார்.
அதற்கு பதிலாக, அரசியல் நிலைமையை மதிப்பிடுவதற்காக டிராகியை நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
டிராகி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் உள்ள கட்சிகளில் ஒன்றான ஃபைவ் ஸ்டார் இயக்கம், பணவீக்கத்தைக் குறைப்பதற்கும், அதிகரித்து வரும் எரிசக்தி செலவினங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு புதிய ஆணையை முன்பு எதிர்த்தது.
இத்தாலியின் சட்டமியற்றுபவர்கள் பரந்த அளவிலான கொள்கைப் தொகுப்பின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினர், ஆனால் கட்சி ஆதரிக்கவில்லை என்றால் பதவி விலகுவதாக டிராகி மிரட்டிய போதிலும் ஃபைவ் ஸ்டார் புறக்கணித்தது. இந்தநிலையில், டிராகிய இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.