அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் முன்னரே போலீசாரால் சசிகலாவுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
காவல்துறையின் அறிவிக்கப்படாத மந்திரியாக சசியின் உறவினா் திவாகரன் செயல்பட்டார்.
காவல்துறையில் உள்ள அதிகாரிகள் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகின்றனா்.
முதல்வர் பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோதும் தற்போது காபந்து முதல்வராக இருக்கும்போது காவல்துறை இவரின் கையில் இருந்தது இல்லை.
இதனால் காபந்து முதல்வா் பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனா் ஜார்ஜ் செயல்படுவதாக குற்றம் சுமத்தினார்.
இதனையடுத்து நேற்று தலைமை செயலாளா் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறைத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோர் உடன் ஆலோசனை செய்தார்.
அப்போது அவா் மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கவர்னா் வித்யாசாகரராவ் தலைமையில் தலைமை செயலாளா், மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோரிடம் ஆலோசனை நடந்தது.
இதில் முதல்வர் பன்னீர் செல்வம் சொன்னது உண்மைதான், காவல்துறை நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சென்னை பல்கலைக்கழகத்துக்கு யார் பாதுகாப்பு போட சொன்னது.
என்றைக்கு விழா நடக்கும் என்று தெரியாமல் ஏன் அங்கு போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனா் என்று வினா எழுப்பப்பட்டது.
இதனைத் தொடா்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
இனி தமிழக காவல்துறை சசிகலாவுக்கு ஆதரவாக நடக்கக்கூடாது. இனி அப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் ராஜேந்திரனை எச்சரித்தார்.