Loading...
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலத்தில் இருந்த எம்எல்ஏக்களை பலத்த பாதுகாப்போடு சொகுசுப் பேருந்தில் ஏற்றியதால், சசிகலாவை பிடிக்காத எம்எல்ஏக்களும் வேறு வழியில்லாமல் ஏறிவிட்டனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் கடந்த இரண்டு நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டார்களாம். மேலும் வெளியே என்ன நடக்கிறது என தெரியாமல் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. தினசரி காலை இதழ்களும் ரெசார்ட்டுக்கு வருவது நிறுத்தப்பட்டது.
எம்எல்ஏக்கள் வேறு செல்போன் வைத்திருந்து அதிலிருந்து பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இமெயில் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள் என ஜாமர் கருவியையும் சசிகலா குடும்பத்தினர் பொருத்திவிட்டனர். இதனால் அந்த சொகுசு ஓட்டல் உள்ள ஒன்றரை கிலோ மீட்டருக்கு செல்போன் உள்பட தொழிற்நுட்ப சாதனங்கள் இயங்காது.
வெளியே என்ன நடக்கிறது. தினசரி பேப்பர்கள் வேண்டும், டிவி போட வேண்டும், செல்போனை கொடுங்கள் எங்கள் குடும்பத்தினருடன் பேச வேண்டும். குடும்பத்தினர் நன்றாக இருக்கிறார்களா, எங்கு இருக்கிறார்கள் என தெரிய வேண்டும். நாங்கள் எங்கு இருக்கிறோம் என எங்கள் குடும்பத்தினர் தவிப்பார்கள் என்று நேற்று 12க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மதிய உணவை தவிர்த்தனர். அதற்கு சிவி சண்முகம், செல்லூர் ராஜு ஆகியோர், செல்போன் தர முடியாது. உங்கள் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆதரவாளர்கள் நீங்கள் அனைத்து வகை வசதிகளுடன் நன்றாக இருப்பதாக தெரிவிப்பார்கள், கவலைப்பாமல் இருங்களு என கூறியுள்ளனர்.
செல்போனில் பேசக் கூட உரிமையில்லையா. நம்பிக்கையில்லை. அப்படி என்ன நாங்கள் தப்பித்து ஓடிபோவோமா என எம்எல்ஏக்கள் கேள்வி கேட்டுள்ளனர். மேலும், புழல் சிறையில் கைதியா இருக்கிறவன் செல்போன்ல பேசுறான். மக்கள் பிரதிநிதியான நாம செல்போன கண்ணால பாக்க முடியல என வேதனையடைந்தனர்.
Loading...