Loading...
நவபாசனமான ஸ்ரீபாலதண்டாயுதபாணியான முருகனை உருவாக்கிய போகரின் சீடரான புலிபாணியின் ஆசிரமம் பழனி மலைஅடிவாரத்தில் உள்ளது. இந்த ஆஸ்ரமத்திற்கு 10.02.2017 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஜெ. வளர்ப்பு மகன் சுதாகரன் வந்தார்.
அவரை புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வரவேற்று ஆஸ்ரமத்திற்கு அழைத்து சென்றார். அப்பொழுது அங்குள்ள புலிப்பாணியின் சமாதிக்கு அருகே உள்ள சிவலிங்கத்திற்கு பால், நெய், பன்னீர், பஞ்சாமிர்தம் என ஏழு வகையான சிறப்பு அபிஷேக பூஜைகளை சுதாகரன் செய்தார். அதன்பின் அங்குள்ள புலிப்பாணி சமாதிகளை வணங்கிவிட்டு பழனி மலைக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு சென்றார்.
இதுபற்றி ஆசிரமவட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பழனிக்கு வந்த சசிகலா முருகனை தரிசித்து வேட்பாளர்களின் பட்டியலையும் வைத்து பூஜை செய்துவிட்டு போனார். அதன்மூலம் அ.தி.மு.க.வும் அமோகமாக வெற்றி பெற்றதின் மூலம் ஜெயலலிதாவும் ஆட்சியை பிடித்தார். அதன்மூலம் முருகப் பெருமானின் மீது சசிகலாவிற்கு பெரும் நம்பிக்கை வந்தது. அதன்பின் தான் கேரளா ஜோதிடர் ஒருவரை சசிகலா அணுகியபோது சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை ஆவதற்கும், முதல்வராவதற்கும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பழனி புலிப்பாணி சமாதியில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடத்தி பரிகாரம் செய்ய வேண்டும். இந்த சிறப்பு பூஜைகளை நான்கு பௌர்ணமி வரை நடத்த வேண்டும். அதற்குள் உங்கள் கோரிக்கைகளும் நிறைவேறும் என்று சொல்லியிருக்கிறார்.
இதற்கு சசிகலா வராவிட்டாலும் அவருடைய உறவினர்கள் யாராவது வந்து பூஜை செய்தாலே பலன் கிடைக்கும் என்று சொன்னதின் பேரில்தான் சசிகலாவின் அக்கா மகனும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான சுகாதரன் வந்து இரண்டாவது முறையாக பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டுகிட்டு சென்றிருக்கிறார் என்று கூறினார்கள். ஆக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை இருந்து வரும் நிலையில் சசிகலா முதல்வராக வேண்டும் என மன்னார்குடி குடும்பமும் ஒருபுறம் ஆர்வம் காட்டி கொண்டுதான் வருகிறது.!
Loading...