மாறிவரும் காலசூழலில் மனிதர்களின் ஆரோக்கியத்தை காக்க இயற்கையான உணவுகளை நாட வேண்டிய அவசியம் வந்து விட்டது.
அப்படி மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கும், பல்வேறு நோய்களை சரி செய்வதற்கும் மாதுளம்பழம் உதவுகிறது.
மாதுளம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கிய நன்மைகள்
மாதுளம்பழத்தை ஜூஸ் செய்து அருந்தினால் அது உடலில் இருக்கும் இரத்த குழாயை சுத்தம் செய்கிறது.
மேலும், கொழுப்பு மற்றும் இரத்த நாளங்கள் வீக்கம் ஆகியவைகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
உடலில் சர்க்கரை அளவு சரியான அளவில் இருக்கவும், இன்சுலின் உணர்திறன் மேம்படுத்தவும் மாதுளம்பழம் உதவுகிறது.
மாதுளம் ஜூஸ் குடித்தால் வயிற்று போக்கு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்
மாதுளம்பழம் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை அது தடுக்கிறது.
கர்ப்பினி பெண்கள் மாதுளம் ஜூஸ் குடித்தால் அதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் குறை பிரசவம் ஆவதை அதிகளவு தடுக்கிறது.
மாதுளம் பழத்தில் உடலில் சேரும் கெட்ட பாக்டீரியாக்களை தாக்கும் திறன் உள்ளதால் அது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
உடல் எடையை குறைக்கவும் மாதுளம் பழம் பயன்படுகிறது.
மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவைகளை மாதுளம் பழம் தடுக்கிறது.