கணவன்- மனைவி ஆகிய இருவரும் உடல் பருமனாக இருந்தால் அவர்களிடம் உள்ள இந்த தாக்கத்தின் பிரச்சனை அவர்களுடைய இல்லற வாழ்க்கையில் ஒரு பெரிய பூகம்பத்தை உருவாக்கி விடுகிறது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய சுகாதார மையம் நடத்திய ஆய்வின் போது, திருமணத்திற்கு பின் ஒரு பெண் அதிக உடல் பருமனாக இருந்தால், அவர்களுக்கு சீரற்ற மாதவிடாய் மற்றும் கருத்தரிப்பு வாய்ப்புகள் பாதியாக குறையும் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் உடல் பருமன் கொண்ட ஆண்களுக்கு தரம் குறைந்த விந்தணுக்கள் மற்றும் விந்தணு எண்ணிக்கை கோளாறுகள் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இதனால் உடல் பருமனாக இருக்கும் தம்பதிகள் கருத்தரிக்க நீண்ட காலம் ஏற்படுவதுடன், அதற்கான வாய்ப்புகளைக் குறைத்து, கருவளத்தை பாதிப்படையச் செய்கிறது.
எனவே, உடல் பருமன் கொண்ட தம்பதிகள் இந்த பிரச்சனையால், ஆரோக்கியமான முறையில் குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றார்கள்.
இந்த ஆய்வின் முடிவில் ஒருவரின் வாழ்வியல் முறை பழக்கவழக்கங்கள் மூலம் அவர்களின் உடல் பருமன் அதிகரிப்பதால், கருத்தரிப்பு தன்மை குறைவு, டைப் 2 நீரிழிவு மற்றும் இதய கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகின்றார்கள்.