தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின், சசிகலாவுக்கு எதிரான அதிரடி பேட்டியைத்தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் யார் முதல்வராக இருக்கப்போகிறார்கள் என மக்கள் குழப்பத்தில் இருந்துவருகின்றனர்.
இதனால், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில், பன்னீர்செல்வம் நடவடிக்கைகள் அம்மாவின் ஆன்மா மன்னிக்காது. இவரின் உறவினர்களும், ஆதரவாளர்களும் நிமிஷத்துக்கு நிமிஷம் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
அதனால் தான் போனை ஆப் செய்து வைத்துள்ளேன். முதல்வர் பன்னீர்செல்வம் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். என்னுடைய உயிருக்கு ஆபத்து. மிரட்டிய ஆதாரம் போனில்தான் உள்ளது எனத் தற்போது அளித்த பேட்டியில் சி.ஆர்.சரஸ்வதி கதறியுள்ளார்.
பன்னீர் மிரட்டினார் என்பது நம்பும்படியாவே இல்லியே?