அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் விருப்பத்தின் பேரிலேயே விடுதியில் தங்கி உள்ளனர் என அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி கூறியுள்ளார்.
எங்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களை சட்டப்படி சந்திப்போம், அதிமுக கட்சி உடைந்துபோகக்கூடாது, எங்கள் சின்னம் எங்களை விட்டு போகக்கூடாது.
எங்கள் அம்மா எங்ககிட்ட சொல்லிட்டு போய்ருக்காங்க, எனக்கு பிறகும் இந்த கட்சி நூறாண்டு வாழவேண்டும் என்று.
நிச்சயமாக சின்னம்மா அவர்கள் முதலமைச்சராக வருவார்கள், தர்மம் வெல்லும்.
மெஜாரிட்டி ஆட்சி எங்களிடம் இருக்கிறது, ஆளுநரிடம் அனைத்து கோப்புகளையும் சமர்ப்பித்துவிட்டோம், நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்.
நாங்கள் யாரையும் ஒழித்துவைக்கவில்லை, அம்மாவுக்காக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் எங்களோடுதான் இருப்பார்கள் என கூறியுள்ளார்.