தமிழகத்தின் அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான கட்டத்தை அடைந்து வருகிறது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவேன் என்று சசிகலா அடம்பிடித்து அதற்கான நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறார். அதனை தடுக்க முதல்வர் பன்னீர் செல்வம் தன்னால் ஆனால் முயற்சிகளை செய்து வருகிறார்.
இதனால் சசிகலாவிற்கும் பன்னீர் செல்வத்திற்கும் இடையே நீயா நானா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
சசியின் கூடாரத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளிவந்து பன்னீருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனை தடுக்க அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா மிரட்டி கடத்தி சென்று ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சென்னை வந்த ஆளுநர் பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவை தனித்தனியே சந்தித்து பேசினார். ஆனால் இதுவரை எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை. இது தமிழக அரசியல் களத்தை உச்ச பரபரப்பு உள்ளாக்கி உள்ளது.
இந்த குழப்பமான சூழ்நிலையில் கருத்தில் கொண்டு ஆளுநர் ஒரு அதிரடி முடிவை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 6 மாதத்திற்கு தமிழக அரசை முடக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.