Loading...
தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையால் சத்தமே இல்லாமல் நடைபெற்று முடிந்துள்ளது.
பீட்டா, உச்சநீதிமன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றும் ஒவ்வொரு வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்தவிடாமல் செய்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு, கடந்த மாதம் தமிழக மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தின் மூலம் தமிழக அரசால் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்று அலங்காநல்லூரில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
Loading...
இந்தப் போட்டியில் பங்கேற்க 950 காளைகள் பதிவு செய்யப்பட்டு 1400க்கும் மேற்பட்ட காளையர்கள் அவற்றை அடக்க களமிறங்கினர்.
Loading...