சர்வகட்சி கட்சி அரசாங்கத்தை அமைக்க ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதார மற்றும் நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர அனைத்துக்கட்சி அரசாங்கம் அவசியம் என வலியுறுத்தி அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பது விடுத்துள்ளார்.
முறையான பொருளாதார சீர்திருத்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான அடிப்படை திட்டங்களை தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொருளாதார ரீதியில் ஸ்திரத்தன்மையை உருவாக்க தேவையான அடிப்படை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் எடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், பொருளாதார வல்லுநர்கள், சிவில் அமைப்புகள் போன்றவற்றின் பங்களிப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நெருக்கடிகளுக்குப் பொதுவான வேலைத்திட்டத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.