Loading...
ஒரே வைத்தியசாலையில் 34 வருடங்களுக்கு முன் பிறந்த மகளும், 56 வருடங்களுக்கு முன் பிறந்த தாயும் மாற்று பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட சம்பவம் ரஷியாவில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் புரியாடியா பிராந்தியத்தை சேர்ந்த அலிசா டிசிரேசெனோவாவின் 34 வருடங்களுக்கு முன் பிறந்த அவரது மகள், வேறு தாயிடம் கொடுக்கப்பட்டுள்ளதையும், அதே வைத்தியசாலையில் 56 வருடங்களுக்கு முதல், அவர் தவறுதலான பெற்றோருக்கு கொடுக்கப்பட்டதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.
மேலும் சம்பவம் தொடர்பாக தெரியவந்ததாவது,
அலிசா டிசிரேசெனோவா தான் வளர்த்து வந்த மகளுடன் வைத்தியசாலையில் மேற்கொண்ட மரபணு பரிசோதனையின் போது இருவருடைய மரபணுக்களும் வெவ்வேறாக இருந்துள்ளது.
குறித்த நிகழ்வை தெரிந்து கொண்ட குறித்த பிராந்தியத்திலுள்ள ஊடகமொன்று, மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கையின் போது அலிசா டிசிரேசெனோவாவும் 56 வருடங்களுக்கு முன்பு மாறி கொடுக்கப்பட்ட குழந்தை என்பதை கண்டு பிடித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பிராந்தியத்தில் புகழ் பெற்றுள்ள கலைஞர் துர்கர்மா என்பவர் அலிசாவின் மகள் என்றும், டாடினா ஜிஹாஜிடோவா என்பவர் அவரது உடன் பிறந்த சகோதரி என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அலிசாவின் சகோதரியாக இருந்துவந்த புதூஷிக்கினா, உண்மையை அறிந்தநிலையில் அலிசா குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கூட்டான குடும்பமாக இணைந்து வாழ்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...