உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நேற்று முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
வாழ்க்கைச் செலவு தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது.உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்படுவதனை எதிர்த்து நாடு முழுவதிலும் போராட்டம் நடத்தப்படும்.
உள்ளுராட்சி மன்றங்கள் சீர்குலைந்துள்ளன.குறிப்பாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.இதனால் டெங்கு அநேக பகுதிகளில் பரவி வருகின்றது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், நிதி வேறும் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
கூடிய விலை கொடுத்தேனும் அரிசி கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.அரிசியின் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளது.நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.