Loading...
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், உடலின் அனைத்து பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும்.
அதில் சில குறிப்பிட்ட முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அது நமது உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளையும் பாதிக்கச் செய்கிறது.
Loading...
எனவே அந்த வகையில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, அன்றாடம் நமது வாழ்க்கை மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
- சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு பேக்கிங் சோடா பெரிதும் உதவுகிறது. எனவே ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து, குடித்து வந்தால், நமது உடலில் உள்ள சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
- நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி இன்றியமையாத ஒன்றாகும். எனவே சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சில உடற்பயிற்சியை அன்றாடம் செய்து வருவது மிகவும் சிறந்தது.
- நமது உடலை அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக, 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் நமது சிறுநீரகங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சர்க்கரை நோய் ஏற்பட்டால், சிறுநீரக தொடர்பான பிரச்சனைகள் எளிதாகத் தொற்றிக் கொள்ளும்.
- புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு சிறுநீரக தொற்றுகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். எனவே அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
- ஆரோக்கியமான சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு, நீர்ச்சத்து மிகவும் அவசியமாகும். எனவே தினமும் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Loading...