ஒரு பிரம்மோற்சவத்தில் கருட சேவை விழாவை தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியம்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
இன்று (செவ்வாய்க்கிழமை) கருட பஞ்சமி தினமாகும்.
ஆடி அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 5-வது திதி பஞ்சமி திதி. இந்த பஞ்சமி திதியை கருட பஞ்சமி என்று கொண்டாடுகின்றனர். இது கருடனின் ஜெயந்தி விழாவாக பல வைணவக் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. கருடன் எம்பெருமானுடைய வாகனம். கருட சேவை விழா என்பது பெரும்பாலான பெருமாள் கோவில்களிலும் நடக்கக் கூடிய பிரசித்தி பெற்ற விழா.
ஒரு பிரம்மோற்சவத்தில் கருட சேவை விழாவை தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியம். உயரே வானத்தில் வட்டமிடும் கருட தரிசனம் பாவங்களை தொலைத்து புண்ணியங்களைத் தந்து எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றி வைக்கும்.
கருட பஞ்சமி அன்று பெருமாள் கோவில்களில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.
இதே நாள் நாகபஞ்சமி நாளாகவும் இருப்பதால், நாகர்களின் தலைவனான ஆதிசேஷனுக்கு பூஜை செய்வதும் நடைபெறும். எதிரெதிர் விஷயங்களான கருடன், பாம்பு இந்த இரண்டையும் ஒரே பஞ்சமி நாளில் வணங்குகின்ற போது, பகை கொண்ட உள்ளங்கள் மாறும். நட்பு பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம், குதூகலம் நிலவும்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் திருவீதி உலா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. நயினார்கோவில் சவுந்திரநாயகி தபசுக்காட்சி. திருவாடானை சிநேகவல்லியம்மன் தபசுக்காட்சி. வடபழனி, குன்றத்தூர், திருப்போரூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.