- 2018-ம் ஆண்டு ஃபின்லாந்தில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் 400 மீ தூரத்தை 51.46 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
- மூன்றே நாட்களில் நான்கு 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று நம்பமுடியாத சாதனை படைத்தார்.
உலக ஜூனியர் தடகளப் போட்டியில் இரட்டைப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயியின் மகள் ரூபால் சவுத்ரி பெற்றார். உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் ஜெய்ன்பூர் கிராமத்தில் ஒரு சிறு விவசாயியான அவரது தந்தை சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்தவர். 17 வயதான ரூபால் சவுத்ரி மூன்றே நாட்களில் நான்கு 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று நம்பமுடியாத சாதனை படைத்தார்.
நேற்று இரவு நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் கிரேட் பிரிட்டனின் யெமி மேரி ஜான் (51.50) மற்றும் கென்யாவின் டாமரிஸ் முதுங்கா (51.71) ஆகியோரை தொடர்ந்து ரூபால் 51.85 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதேபோல் செவ்வாய் கிழமை நடந்த 4×400 மீ.தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
2018-ம் ஆண்டு ஃபின்லாந்தில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் 400 மீ தூரத்தை 51.46 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அதற்கு பிறகு பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ரூபால் பெற்றுள்ளார்.